Thursday, August 26, 2010

>> உயிர் ...

இந்த உலகில்...
எந்த ஒரு மனித கண்டுபிடிப்பாலும்....
ஏற்படும் எந்த ஒரு உயிரிழப்பும்....
கொலையே!!!...

>> பங்குசந்தை...

நினைப்பதற்கு மாறாய்தான் 
நடக்கும் என்று...
மாறி சென்றாலும்....
அதற்கு மாறாய்தான் 
நடக்கும் விந்தை......
பங்குசந்தை...

>> வறுமை...

சுவிஸ் வங்கியில் குவியும் கருப்பு பணம்...
வெகுதொலைவில் இல்லை...
இந்தியாவில்....
வறுமைக்கும் அதிகமாக பிச்சை எடுப்பவர்மேல் 
வழக்கு தொடரும் காலம்...

>> நீதி ...

உலகத்தில் உள்ள அத்தனை அநியாயத்திற்கும்.... 
நிச்சயம் நீதி கிடைக்கும்....
கொஞ்சம் நிதி கொடுத்தால்.....

>> மண்புழுக்கள்..

குறைந்தபட்ச வங்கி இருப்பு பத்து லட்சம்...
சொந்த வீடு, சொகுசு காரு....
கிரவுண்டு நிலம், கிரெடிட் கார்டு...
இவையெல்லாம் இல்லாதவர்களை 
பிடித்து தூக்கிலிடுங்கள்...
என்னையும் சேர்த்து...
நாங்கள் இந்த உலகில் வாழ 
தகுதியில்லாத....
மனிதர்கள் இல்லை மண்புழுக்கள்...

>> அக்கா ...

துரத்திபிடித்து விளையாடிய என் முதல் தோழி..
அடித்து அழ வைத்த என் முதல் எதிரி...
கொஞ்சிய என் முதல் விளையாட்டு பொம்மை...
இன்னும் என்னை குழந்தையாகவே 
பார்க்கும் என் அன்பு சகோதரி...


>> பொய்...

பொய் என்பது உண்மை...
உண்மையில் நான் சொன்னது பொய்..

>> பள்ளி நண்பர்கள்...

தீபா, தினேஷ், திவ்யா, கணேஷ்...
இப்படி பெயர்களில் அல்ல....
முதலில் நினைவுக்கு வரும் பள்ளி நண்பர்கள்...
சிலேட்டு பென்சிலும், ஜாமன்றி பாக்சும்...
இந்திய மேப்பும் தான்...

>> மீனவ குடும்பம்...

புயலுக்குப்பின் அமைதி என்பதெல்லாம் 
ஊர்வாய்க்கு மட்டும்தான்...
அதில் அவனை தொலைத்துவிட்டு 
அனாதையாய் நிற்கும்...
எங்கள் மீனவ குடும்பத்திற்க்கல்ல...

>> மது ...

மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு...
மக்களின் நலன் கருதி...
சட்டம் இயற்றி, முகப்பில் 
எச்சரிக்கை வாசகம் அச்சிட்டு...
வெளியிட்டு விற்பனை 
செய்வோர் தமிழக அரசு... 
தெய்வம் மட்டுமல்ல... 
அரசனும் நின்றே கொல்கிறான்....

>> கண்ணீர் ...

நிகழ்வுகள் கைமீறும்போது....
வேறு வழியின்றி...
கண்ணீருடன் சமாதானம்...
"எல்லாம் சரியாபோயிடும்"....

>> நாணயம் ...

நீதி, நேர்மை, நம்பிக்கை, 
நாணயம், நியாயம், உண்மை....
இவை அத்தனையும் அடங்கிபோகுமே!!...
எங்கள் நாணயத்தின் முன்...

>> பள்ளிக்கூடம் ...

அரைக்கால் பேண்ட்...
அரைபரீட்சை லீவு...
பி.டி பீரிட்...
கேண்டீன் கிரீம்பண்...
முடியாமலேயே இருந்திருக்க கூடாதா... 
அந்த சொர்க்க வாழ்க்கை...

>> பணம்...

இன விருத்தி
சக்தி பெற்ற 
ஒரே அக்ரினை...
பணம்...

>> வானவில்...

தினம் ஒரு நிறமாய் பிரிந்து கொள்ளுங்கள்...
ஏழு நாட்களும் எங்கள் வானத்தில் வட்டமிடுங்கள்...
உங்கள் அழகை ரசிக்க மட்டுமல்ல....
தினம் மழை வேண்டியும் கேட்கிறோம்...

>> பூமி...

எதிர்பார்த்திருக்க மாட்டாய்....
எங்களை படைத்த உன்னை...
நாங்களே அழிக்க தொடங்கிவிட்டோம்...

>> மனசாட்சி...

ஆயிரத்தில் படியாதது லட்சத்தில் படியலாம்...
லட்சத்தில் படியாதது கோடியில் படிந்துவிடும்...
எளிமையாக கவிழ்த்துவிடலாம் இந்த ஆட்சியை...
மனசாட்சியை...

>> கவிஞன்...

அவன் வேதனையால்....
அவனுக்கு புகழ் என்றால்...
அவன் பெயர் தான் கவிஞன்..

>> அநியாயம் ...

ஏழு கடல், ஏழு மலை தாண்டி 
எங்கேயோ இருக்கியாம்...
அநியாயம் அதிகரிக்கும்போது 
புது அவதாரம் எடுப்பியாம்.....
அடங்காத அரக்கர்களை 
அடியோடு அழிப்பியாம்....
இன்னும் எதற்கு யோசிக்கிறாய்...
இங்கே தலை தூக்க 
இனி வேறெந்த அநியாயமும் இல்லை...

>> சுதந்திர அடிமைகள்..

பேச்சுரிமை, எழுத்துரிமை 
எல்லாம் இருக்கு...
எதுவும் செய்யமுடியாது...
இந்த சுதந்திர இந்தியாவில்...
நாங்கள் எல்லாம் சுதந்திர அடிமைகள்...

>> இறப்பு....

நேர்ந்தவனால் மட்டும் உணரமுடியாத...
ஒரு சோகம்...
இறப்பு....

>> பிச்சை...

பசிக்கொடுமைக்கு என் 
தாய் தமிழ் தந்த....
தரங்கெட்ட வார்த்தை...
பிச்சை..

>> வாழ்க்கை...

நாலுபேரு பார்ப்பாங்க....
நாலுபேரு என்ன நினைப்பாங்க...
நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க....
இப்படி...
அந்த நாலுபேருதான் 
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்....
உன், என் வாழ்க்கையினை..

>> மகாத்மா...

ஆயிரம் பேரை சுட்டுதள்ளும்...
இயந்திர துப்பாக்கிக்கு...
காந்தி என்று பெயர் 
வைப்பது போல் தோன்றுகிறது... 
எங்கள் ரூபாய் தாள்களில்...
மகாத்மா உன் உருவம் பாக்கும்போது....

>> கடன் அட்டைக்காரி...

சும்மாதான் இருந்தேன் 
வாங்க சொல்லி 
அன்பு தொல்லை கொடுத்தாளே...

சும்மாதான் வச்சிருந்தேன் 
உபயோகிக்க சொல்லி
செல்லக்கட்டளை போட்டாளே... 

சும்மாதான் இருக்கேன் 
பணம் கட்டச்சொல்லி 
கெட்டவார்த்தையால் திட்டுகின்றாளே...

இந்த கடன் அட்டைக்காரி....
அரவாணி ஆடு...
விதவை சிறுத்தை...
ஏழை எருமை.. 
பணக்கார பண்ணி...
கேள்விபடாத வார்த்தைகள் 
என யோசிக்காதீர்கள்...
பாவம் இவையெல்லாம் 
பிரித்து பார்க்க தெரியாது... 
அவைகளுக்கு ஆறாவது அறிவில்லை.....

>> பணம் ...

பொது அறிவு வினா விடை...
""////
கேள்வி: பணத்திலேயே சிறந்த நாடு எது??
பதில்: அமெரிக்கா.
கேள்வி: பணத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு எது??
பதில்: சீனா.
கேள்வி: பணத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு எது??
பதில்: இந்தியா. 
***///
அந்த ஒன்றிரண்டு எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்..

>> இந்திய கிரிக்கெட் அணி..

தீபாவளியன்று மட்டும்...
வெடிக்கதெரியாத....
அதிரடி சரவெடி....
இந்திய கிரிக்கெட் அணி..

>> மனம் ...

மூளைதான் மனது....
இதை ஒப்புக்கொள்ள..
இங்கே யாருக்கும்...
மனமில்லை...

>> எதுங்க சாமி??

சாமினா எதுமா சிலையா?னு கேட்டேன்..
இல்லடா ஒருவேளை அந்த சிலையை யாரவது திருடினா
பிடிச்சு ஜெயில் தண்டனை கொடுக்கறாங்க இல்ல 
அந்த சக்திதான் சாமினு சொல்லுச்சு...
அப்போ தப்பே செய்யாம சில பேர் ஜெயில்ல இருக்காங்களே 
அவங்களுக்கு எதுமா சாமி??னு கேட்டேன்.....
இதுவரைக்கும் பதில் இல்லை ....
நீங்களே சொல்லுங்க எதுங்க சாமி???

>> பங்குசந்தை...

வாங்கி விற்றாலும் நட்டம்...
விற்று வாங்கினாலும் நட்டம்.....
விற்ற பின் ஏறும்...
வாங்கிய பின் இறங்கும்....
அடேய்!!! எங்கோ இருக்கும் என் நண்பனே....
எதுக்கடா வந்தோம் இந்த ......
பாலாப்போன பங்குசந்தைக்கு ...

>> பண நோயாளிகள்...

இந்த உலகில்...
மன நோயாளிகளை தவிர...
அனைவருமே!!...
பண நோயாளிகள்....

>> கடவுள் ...

என்னை மன்னித்துவிடு கடவுளே...
இந்த நித்யானந்தரும்....
அந்த பிரேமானந்தரும் தான்....
நீ இல்லை என்பதற்கு ஒரே சாட்சி...

>> பகுத்தறிவு...

கடவுள் படைத்தததா???
கடவுளை படைத்ததா???
கடவுளை தேடுவதா???
எது பகுத்தறிவு???...

>> குள்ளயனே வெளியேறு...

எல்லை தாண்டுகிறதாம் சீன ராணுவம்....
எதற்கும் தயாராகுங்கள் இன்னும்ஓர் 
சுதந்திர போராட்டத்திற்கு.....
இந்த முறை முழக்கம்....
வெள்ளயனே வெளியேறல்ல....
குள்ளயனே வெளியேறு...

>> பங்கு சந்தை ...

எங்கோ வெடித்த குண்டுக்கு....
இங்கே மரண ஓலம்....
பங்கு சந்தை முதலீட்டாளன் வீடு....

>> அப்துல்கலாம் கனவு ....

என்றோ வளம் மிக்க இந்தியாவை
கண்டுபிடிக்கும் முயற்சியில்.....
கண்டுபிடித்தார்களாம் அமெரிக்காவையும், 
மேற்கு இந்திய தீவுகளையும்.....
எல்லாம் சரி...
2020 ல் இந்தியா நிச்சயம் வல்லரசாகிவிடும்....
கனவு கண்டாராம் அப்துல்கலாம்....
தெரியுமா உங்களுக்கு????....

>> நினைவுகள் ...

நடந்ததை நினைத்தால் அழுகை வரும்....
அதில் இருவகை உண்டு....
ஒன்று நீ மறக்க நினைத்தவைகள்.....
மற்றொன்று உன்னை மறக்க வைத்தவைகள்....

>> பங்கு சந்தை ...

பங்கு சந்தை வரைபடம்....
குழந்தை கையில் காகித பென்சில்...

>> மொபைல்...

உடலை விட்டு தள்ளி வாழும்....
இன்னும் ஓர் உடலுறுப்பு.....
மொபைல்...

>> அழகு ...

வரி முடிவின் தொடர் புள்ளியும்....ங்காங்கே தோன்றும் ஆச்சர்ய குறியும்!!!...
யோசிக்க வைக்கும் கேள்வி குறிகளும்தான் 
கவிதைகளுக்கு அழகோ???...


>> பணம்...

உன்னை, என்னை சுற்ற வைக்கும்....
உலகையே ஒரு நிமிடம் நிற்க வைக்கும்....
சொல்லி முடியும் முன்னே வாய் இனிக்கும்....
பாடங்கள் பல சொல்லி கொடுக்கும்....
ஊரே சொல்லும் அந்த மூன்றெழுத்து மந்திரம்....
அட இன்னும் தெரியலையா???....
பணம்ங்க...

>> மறதி...

மனிதனின் மிகச்சிறந்த பலம....
மிகப்பெரிய பலவீனம்.....
மறதி...

>> பங்குச்சந்தை...

என்ன நினைகிறாய், என்ன செய்கிறாய்...
எதுவும் விளங்கவில்லை....
சிரிக்கிறாய் என நெருங்கினால் முறைக்கிறாய்....
ஆசைகாட்டி ஆளை கொல்லும் அழகிய மோகினி....
யாரடி உனக்கு பெயர் வைத்தார்கள் பங்குச்சந்தை என....

>> வேடிக்கை....

சுதந்திர தின விழா கொண்டாட்டம்.....
பாதுகாப்புக்கு தீவிரம்...
வினோத வேடிக்கை....
கோவிலுக்குள் பேய் ஓட்டுகிறார்கள்...

>> Alumini Meet...

முதன் முதலாய்.....
ஒரு சந்தோசத்திற்கு நினைவுநாள்....
Alumini Meet.....

>> தமிழ் ...

வேறெந்த மொழியில் எழுதினாலும்.....
இவ்வளவு அழகாய் இருந்திருக்க மாட்டாயடி....
என் அழகிய தமிழே !!!...


 

>> இந்தியன் ரயில்வே...

கொள்ளை அடித்த பத்து லட்சத்தில்...
வெள்ளையன்...
பிச்சை போட்ட பத்து பைசா...
இந்தியன் ரயில்வே!!!!.....

>> ஈழம்...

ஈழம்னா என்னான்னு தெரியாது....
இலங்கையின் தலைநகரம் தெரியாது.....
ராஜபக்க்ஷே யாருன்னு தெரியாது...
பிரபாகரன் பேருகூட தெரியாது....
சாவு மட்டும் தெரிஞ்சு போச்சே!!!!!....
என் தமிழ் குழந்தைகளுக்கு.....

>> வாழ்க்கை...

கல்லூரி நண்பர்களின் பிரிவிலும்...
காதல் தோல்வியிலும்... 
தந்தையின் இழப்பிலும்...
பண பிரச்சனைகளிலும் தான்...
புரிந்து கொண்டேன்....
வாழ்க்கை என்பதும் 
அதில் சோகம் என்பதும்...
அர்த்தமற்றது...

>> அப்பா...

வாய கட்டி வயித்த கட்டி நீ கட்டுன வீட்டுல...
ஆயிரம் பேர் கலந்துகிட்ட அந்த நிகழ்ச்சில நாயகனா இருந்த...
உசிரில்லாம கிடந்த...
நீ பார்த்து பழக்கிவிட்ட சொந்தமெல்லாம்...
உன்ன பாருன்னு சொல்லிட்டு அழுதது 
எனக்கு ஒன்னும் புரியல நின்ன இடம் தெரியல... 
நீ உயிரோட இல்லைங்கறது கூட கவலை இல்ல...
இன்னும் கொஞ்ச நேரம் தான் எங்க கூட இருப்பனு 
நினச்சுதான் துடிச்சேன், அழுதேன்... 
என்னோட சாவையும் சேத்து அன்னைக்கே அனுபவிச்சேன்...

>> அப்பா...

அப்பா...
நீ என் மேல் கொண்ட பாசம்....
அக்காவிடம் காட்டிய அன்பு...
அம்மாவிடம் போட்ட சண்டை....
சுற்றாரிடம் பழகிய நட்பு....
இவை அத்தனையையும் பிரித்து விட்டதே...
எதோ ஒரு அதிகாரி கொடுத்த.....
உன் இறப்பு சான்றிதல்...